உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / கணவன் பைக்கிலேயே கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி | Krishnagiri | Mallappakonda | Crime

கணவன் பைக்கிலேயே கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி | Krishnagiri | Mallappakonda | Crime

கணவன் பைக்கிலேயே கள்ளக்காதலனுடன் எஸ்கேப்பான மனைவி | Krishnagiri | Mallappakonda | Crime கிருஷ்ணகிரி மாவட்டம் தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் - ஹாசினி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மௌனிகா என்ற மகள் உள்ளார். ரமேஷ், தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு 13ம் தேதி போயனபள்ளியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். மறுநாள் தமிழகம் - ஆந்திரா எல்லையில் உள்ள மல்லப்பா மலை கோவிலுக்கு மனைவி, குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், ஹாசினியின் தாய் ருக்கம்மா, ரல்லபுதுகுரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மல்லப்பா மலைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடர்ந்த புதர்களுக்குள் ரமேஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டனர். அவரது தலை, கை மற்றும் கால்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, மலைக்குச் செல்லும்போது கணவருடன் சென்ற ஹாசினி, திரும்பி வரும்போது வேறு ஒருவருடன் செல்வது பதிவாகியிருந்தது. போலீஸ் விசாரணையில், ஹாசினிக்கு திருமணத்திற்கு முன்பே தனது பெற்றோர் ஊரான போயனப்பள்ளியை சேர்ந்த சிறுவயது நண்பர் யுகேந்தர் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்பு நீடித்தது. இதற்கு கணவர் ரமேஷ் தடையாக இருந்ததால், அவரை கொலை செய்ய ஹாசினி திட்டமிட்டார். இதற்காக கணவரை தனது ஊருக்கு வரவழைத்து, மல்லப்பா மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். வழியில், யுகேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கி, வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கொலை செய்தனர். கொலைக்குப் பிறகு, ரமேஷின் பைக்கில் குழந்தையுடன் ஹாசினியும், யுகேந்தரும் தப்பிச் சென்றனர். பைக்கை அருகில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் போட்டுவிட்டு, இருவரும் ரயிலில் ஏறிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் யுகேந்தரின் கூட்டாளிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஹாசினி மற்றும் யுகேந்தரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜூலை 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !