/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ பாளம் பாளமாக விரிசல் விட்டுள்ள வீடுகள் | Houses Repair | Krishnagiri
பாளம் பாளமாக விரிசல் விட்டுள்ள வீடுகள் | Houses Repair | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் அகலக்கோட்டை கெட்டுவுனிசே கிராமத்தில் பட்டியலின மக்கள் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த 1994 ம் ஆண்டு அரசு சார்பில் 21 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக வீடுகள் பராமரிக்கப்படாமல் விட்டதால் சிதிலமடைந்து பயனற்றதாகி விட்டது. வீடுகளின் மேல் கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. மழை பெய்தால் கூரை வழியாக அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.
ஜன 25, 2025