விடிய விடிய 25 தெய்வங்கள் அலங்கார பல்லக்கு வீதியுலா
விடிய விடிய 25 தெய்வங்கள் அலங்கார பல்லக்கு வீதியுலா| Palanquin utsav| Hosur ஓசூர் மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலை கோயிலில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விநாயகர், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை, கோட்டை மாரியம்மன், வெங்கடாசலபதி, துர்க்கை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளில் சுவாமி பிரவேசித்தனர். நையாண்டி மேள ஆட்டம், வான வேடிக்கைகளுடன் விடிய விடிய பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
பிப் 18, 2025