தமிழகம், ஆந்திரா கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்பு
தமிழகம், ஆந்திரா கர்நாடகா மாநில பக்தர்கள் பங்கேற்பு / Krishnagiri / Shivalingeswara Swamy Temple Chariot கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தேவேகவுண்டன் தொட்டி மலை கிராமத்தில் சிவலிங்கேஸ்வரர் கோயிலில் 86 வது ஆண்டு மாசி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவம் மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் ஏராளமானவர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் தமிழகம், ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
மார் 14, 2025