உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளிக்கு வர அச்சப்பட்டு மாணவ, மாணவிகள் புறக்கணிப்பு | students who skipped school | Krishnagiri

பள்ளிக்கு வர அச்சப்பட்டு மாணவ, மாணவிகள் புறக்கணிப்பு | students who skipped school | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு 13 வயது மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வழக்கில் மூன்று ஆசிரியர்களும் கைதாகி சஸ்பெண்டில் உள்ளனர். அதைத் தொடந்து நேற்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டவில்லை. பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குழந்தைகள் மன ஆலோசனை குழு, தாசில்தார் மற்றும் பர்கூர் டிஎஸ்பி உள்ளிட்டோர் பள்ளியில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேநேரம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை