உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / லஞ்சம் வாங்கிய VAO கைது | VAO arrested for bribery | krishnagiri

லஞ்சம் வாங்கிய VAO கைது | VAO arrested for bribery | krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், பள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவர் வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை ப்ராஸஸ் செய்ய 4000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் பள்ளப்பள்ளி VAO தம்பிதுரை. லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையிலான குழு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முருகேசனிடம் கொடுத்து அனுப்பினர். vao தம்பிதுரை பணத்தை அசிஸ்டன்ட் புஷ்பாவிடம் கொடுக்க வலியுறுத்தினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தம்பிதுரை மற்றும் புஷ்பாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ