பிரம்மாண்ட புஷ்பா 2 கிளைமாக்ஸ் செட்டில் விநாயகர் | Vinayagar Chadhurthi Festival | Krishnagiri
பிரம்மாண்ட புஷ்பா 2 கிளைமாக்ஸ் செட்டில் விநாயகர் | Vinayagar Chadhurthi Festival | Krishnagiri கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் ராஜா மார்த்தாண்ட பக்த மண்டலி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது கடந்த ஆண்டுகளில் சினிமா கலைஞர்களை கொண்டு அத்திவரதர், பாகுபலி, கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட பல்வேறு வகையான பிரமாண்டமான சினிமா செட்கள் அமைத்து அதில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். இந்தாண்டு புஷ்பா 2 பட கிளைமாக்ஸ் காட்சியில் வருவது போல் செட் அமைக்கப்பட்டது. செட்டின் உள்பகுதியில் காளி கோயிலுடன் விநாயகரை அமைத்துள்ளனர். இதனை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பிரமிப்பாக பார்த்து செல்கின்றனர். இதற்காக கடந்த 3 மாதங்களாக 35 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்றன. அதேபோல் மற்றொரு இடத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் போன்று 18 படிகள் அமைத்து விநாயகர் சிலை வைத்து செட் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட சினிமா கலைஞர்களை கொண்டு பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செட்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.