மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை | Krishnagiri | Woman locks leopard in house
மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை | Krishnagiri | Woman locks leopard in house கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையான ஆனெக்கல் - ஜிகினி ரோடு அருகே உள்ள குண்டுரெட்டி லேஅவுட்டில் வசிப்பவர் வெங்கடேஷ். இவர் வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனை பார்த்த வெங்கடேஷின் மனைவி வெங்கடலட்சுமி வீட்டின் வெளியே கதவை பூட்டினார். சிறுத்தை வீட்டிற்குள் சிக்கியது. வெங்கடேஷ் பன்னார் கட்டா வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் வீட்டிற்குள் சிக்கிய சிறுத்தையை பிடிக்க வீட்டின் வாசலில் கூண்டு வைத்து காத்திருந்தனர். என்னும் சீறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து அறையில் பதுங்கி இருந்து சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். மயக்கம் அடைந்த சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்து ஜிகினி அருகே உள்ள பன்னார்கட்டா வனப்பகுதியில் விட்டனர்.