பாஜவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் பார்த்திபன் Admk Bjp
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். தேனி கடமலைக்குண்டில் நடக்கும் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் மாஜி தேனி எம்.பி. பார்த்திபன் பா.ஜ. வில் இணைய போவதாக உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூட்டத்தை விட்டு வெளியேறிய உதயகுமார் காரில் தேனி சென்றார். பார்த்திபனை கையோடு அழைத்து வந்து உசிலம்பட்டி ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட மேடையில் ஏற்றி பேச வைத்தார்.
பிப் 27, 2024