திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மில்கேட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விரதம் இருக்கும் பக்தர்கள் மேலூர் சாலைக்கரையான் ஊரணி கரை விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அலகு குத்தி, பறவைக் காவடி எடுத்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மார் 30, 2024