பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள் Temple Festival Attur Salem
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து வரவேற்க காலை 7.02 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக முதலில் பெரிய பெருமாளும், அதைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜன 10, 2025