தற்கொலைக்கு துாண்டும் குடும்ப பிரச்னை|15,356 People Committed Suicide |Tamil Nadu
தற்கொலை எண்ணங்கள் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில் அதிக அளவில் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. வளரும் நாடுகளில் குடும்ப சூழல், வேலை வாய்ப்பின்மை, காதல் தோல்வி, தேர்வு தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. மத்திய அரசின் குற்ற காப்பகத்தின் 2022 ம் தரவுகளின் படி தற்கொலை அதிகம் நடைபெறும் ஐந்து மாநிலங்கள் முதலாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இரண்டாவது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. கடந்த 2022 ம் ஆண்டு கணக்கெடுப்பில் தமிழகத்தில் 15 ஆயிரத்து 386 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள் அது குறித்து வெளிப்படுத்தி இருப்பார்கள். உடனடியாக அவர்களை மனநலம் மருத்துவரிடம் கூட்டி சென்று அது குறித்து உரிய சிகிச்சை பெற வேண்டும். தற்கொலை எண்ணம் குறித்து ஒருவர் பேசினால் அவரை அமைதியாக அருகில் அமர வைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 2022 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் 12.4% அதுவே 2021-ல் 12% ஆக இருந்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாதம் 150 பேர் இது தொடர்பான சிகிச்சைக்கு வருகிறார்கள்.