மதுரை சோழவந்தானில் அசைவ ஓட்டலில் ஆய்வு | 22 people who eat grilled chichen are admitted
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை பாலம் அருகே உள்ளது ப்ரிடா ஓட்டல். இங்கு நேற்றிரவு சிலர் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டனர். சிலர் கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்றனர். சோழவந்தனை சேர்ந்த பிரசன்னா என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்டார். சிறிது நேரத்தில் 10 பேருக்கும் வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. அந்த ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை உட்பட 12 பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. 22 பேரும் சோழவந்தான் அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். அந்த ஓட்டலில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.