உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சிறு பிரச்னைக்கு கூடஅரிவாள் துாக்கும் கலாச்சாரம் | 3 pepole lost their lives in 10 days

சிறு பிரச்னைக்கு கூடஅரிவாள் துாக்கும் கலாச்சாரம் | 3 pepole lost their lives in 10 days

சிறு பிரச்னைக்கு கூட அரிவாள் துாக்கும் கலாச்சாரம் | 3 pepole lost their lives in 10 days | Muthukulathur ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி வயது 40. இவர் அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ராஜாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் ராஜா தனது தாய்மாமன் மோகனிடம் கூறினார். ஆத்திரமடைந்த மோகன், கோபால்சாமியை தட்டிக்கேட்டார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. மோகன். கார்த்திக் ராஜா உட்பட ஐந்து பேர் கும்பல் கோபால்சாமியை கட்டையால் கடுமையாக தாக்கி விட்டு எஸ்கேப் ஆகினர். பலத்த காயமடைந்த கோபால்சாமி சிகிச்சைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இவ்வழக்கில் மோகனை கீழத்தூவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கைது செய்தார். தலைமறைவான கார்த்திக் ராஜா, பரமேஸ்வரி, சிலையம்மாள், வாணி ஆகியோரை தேடுகின்றனர். முதுகுளத்துாரில் சிறு பிரச்னைக்கு கூட அரிவாள், பட்டாக்கத்தியை துாக்கும் மோசமான கலாச்சாரம் நீடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

மே 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ