/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பட்டப்பகலில் கொள்ளையர்கள் துணிகரம் | 55 pound of loot | Melur | Madurai
பட்டப்பகலில் கொள்ளையர்கள் துணிகரம் | 55 pound of loot | Melur | Madurai
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மிக்கெட் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் துபாயில் வேலைப் பார்த்தார். சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி மிட்டாய் கம்பெனியில் வேலைப் பார்க்கிறார். வீட்டை பூட்டி விட்டு தம்பதியினர் வேலைக்கு சென்றனர். பின் மதியம் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 55 பவுன், ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலுார் போலீசார் கொள்ளையர்களை தேடுகின்றனர். மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 55 பவுன், ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜூலை 04, 2024