உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இளைஞர்களுக்கு அதிமுக அட்வைஸ் | Don't look for the leader on the screen| ADMK Advice

இளைஞர்களுக்கு அதிமுக அட்வைஸ் | Don't look for the leader on the screen| ADMK Advice

இளைஞர்களுக்கு அதிமுக அட்வைஸ் | Dont look for the leader on the screen | ADMK Advice | TamilNadu Politics அதிமுக மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் உசிலை டாக்டர் விஜய பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்தியவர் பழனிச்சாமி. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தவர் ஸ்டாலின். திமுக கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைத்து வந்துள்ளது. வரிச் சுமைகளை சுமத்தி மக்களின் பொருளாதார வாழ்வை சீரழித்தது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் போதைக் கலாச்சாரம் தலை தூக்கி விட்டது. மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள், இளைஞர்கள் படுகொலை சம்பவம் தினமும் நடக்கிறது. மக்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. திமுக அரசு எப்போது முடியும் என்று மக்கள் காத்திருந்த நிலையில் தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி குதிரை வேகத்தில் முந்தி வருகிறது. தமிழகம் மீண்டும் தலை நிமிர வளமான சமுதாயத்தை கட்டமைக்க தகுதியுள்ள ஒரே தலைவர் பழனிச்சாமி தான். எனவே இளைஞர் சமுதாயம் திரையில் தலைவர்களை தேடாமல், மாயையை விட்டு விலகி பழனிச்சாமி கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவர் முதல்வராக இருந்தால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் வந்து சேரும். எனவே பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்த இளைஞர் சமுதாயம் சபதமேற்க வேண்டும். அப்போது தான் ஒளிமயமான தமிழகம் மீண்டும் மலரும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

ஏப் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை