உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை ரயில்வேக்கு தினமும் 51,000க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை |Amrut Project|Madurai Railway Station

மதுரை ரயில்வேக்கு தினமும் 51,000க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை |Amrut Project|Madurai Railway Station

மதுரை ரயில்வேக்கு தினமும் 51,000க்கும் மேற்பட்ட பயணிகள் வருகை | Amrut Project | Madurai Railway Station புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கான அடல் மிஷன் எனும் அம்ருத் (Amrut) திட்டத்தை கடந்த 2015 ம் ஆண்டு பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அம்ருத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1275 ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மதுரை உட்பட 32 ரயில்வே ஸ்டேஷன்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 803 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது. இதன்படி பயணிகள் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் இந்த மறு சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடக்கிறது. உலகப்புகழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் அதிகம் வருவதால் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முக்கிய ரயில்வே போர்ட்டாக பார்க்கப்படுகிறது. தினமும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை ரயில்வேயை பயன்படுத்துகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி மதுரை ரயில்வே ஸ்டேஷனில் கட்டமைப்பு வசதிகளை தெற்கு ரயில்வே மேம்படுத்தி வருகிறது. இதன்படி பிரதான கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் தரைத்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது தரைத்தளத்தில் 25 சதவீதம் பைல்ஸ் போடப்பட்டுள்ளது. மேலும் 25 சதவீதம் மெஸ்ஸானைன் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் மல்டி லெவல் டூவீலர் பார்க்கிங் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர கிழக்குப் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஒன்றும் அமையவுள்ளது. ஆறு மற்றும் ஏழாவது பிளாட் பார்ம் பகுதியில் பார்சல்களை சுலபமாக கொண்டு செல்ல நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் 6வது பிளாட் பார்மில் படிக்கட்டுகள் அமைக்கும் பணியும் துரிதமாக நடக்கிறது. கூடுதல் எஸ்கலேட்டர்கள் மற்றும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் - ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் சுரங்கப்பாதை அமையவுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் R.P.F. அலுவலகம் புதிதாக அமைக்கப்படும். அனைத்து பிளாட் பார்ம்களை இணைக்கும் வகையில் கூடுதலாக இரண்டு நடை மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே ஜங்ஷன் கிழக்கு மற்றும் மேற்கு என இருபுறமும் இரண்டு ரயில்வே போர்ட் அமைகிறது. மதுரையில் தினமும் 96 ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வருகின்றனர். அம்ருத் திட்டத்தின் கீழ் மறு வடிவமைப்பு திட்டம் நிறைவடைந்தவுடன் மதுரை ரயில்வே ஸ்டேஷன் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை