தென் தமிழகத்தில் முதல் முறையாக அப்போலோ டாக்டர்கள் சாதனை | Madurai | Apollo Doctors
தென் தமிழகத்தில் முதல் முறையாக அப்போலோ டாக்டர்கள் சாதனை | Madurai | Apollo Doctors feat for the first time in South Tamil Nadu மதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி வலிப்பு நோயால் தினமும் 10 முறை கிழே விழுந்து அடிபட்டுவந்தார். அதனால் அந்த சிறுமியின் எல்லா செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன. சிறுமியின் மூளையின் இடது பகுதியிலிருந்து வலது பகுதிக்கு தேவையற்ற வகையில் நரம்புகளின் துடிப்பு அதிகமாக ஏற்படுவதை அப்போலோ மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மூளை நரம்பியல் நிபுணர்கள் மீனாட்சி சுந்தரம், ஷ்யாம், மயக்கவியல் நிபுணர் டாக்டர் நிஷா தலைமையிலான குழுவினர் சிறுமிக்கு கார்லஸ் காலாஸ்டோமி என்ற சிக்கலான 6 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சிறுமி குணமடைந்தார்.