நாட்டின் ஆரோக்கியம் என்ற தலைப்பில் 4வது பதிப்பு வெளியீடு | World health day | Apollo hospital
உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டின் ஆரோக்கியம் (Health of Nation) என்ற தலைப்பில் 4வது பதிப்பை மதுரை அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடல் வெளியிட்டது. இந்த அறிக்கையானது இந்தியாவில் தொற்றா நோய்களின் தாக்கம் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதையும், குறிப்பாக புற்றுநோயின் தலைநகரமாக இந்தியா மாறும் வகையில் நோய் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களின் எண்ணிக்கை எச்சரிக்கை தரக்கூடிய வகையில் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இந்தியர்களில் 3ல் ஒருவர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் 3ல் 2 பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலையிலும், 10ல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டவராகவும் உள்ளனர். ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்னைகளின் தாக்கத்தை உடல் பரிசோதனைகள் குறைப்பதால், சீரான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடல் சிஓஓ நீலகண்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடல் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், மார்க்கெட்டிங் மண்டல பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் பொது மேலாளர் கற்பகவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.