உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசிடம் கோரிக்கை

அப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசிடம் கோரிக்கை

அப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசிடம் கோரிக்கை Request to the government |The Tamil Nadu Appalam Vadagam Mor Vatthal Sangam | Madurai அப்பளம் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது சிறு, குறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது என தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் திருமுருகன் கவலையுடன் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ அப்பளம் விலையை 50 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தி விற்கும் சூழல் இருப்பதால் மக்கள் வாங்க தயங்குவர். இதனால் வியாபாரமும் தளர்ந்து வருகிறது தமிழகத்தில் இயங்கி வந்த பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தற்போது பாதியாக குறைந்து செயல்பட்டு வருகின்றன. பல நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டு விட்டன என அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, அப்பளம் மற்றும் அதனை சார்ந்த சிறு தொழில்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை