உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கைதுசெய்யப்பட்டமுன்னாள் அமைச்சர்உள்ளிட்டோர்உண்ணாவிரதம்| Madurai | Arrest minister | RB Udayakumar

கைதுசெய்யப்பட்டமுன்னாள் அமைச்சர்உள்ளிட்டோர்உண்ணாவிரதம்| Madurai | Arrest minister | RB Udayakumar

மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் டோல் கேட்டை இடமாற்றம் செய்யக்கோரி திருமங்கலத்தில் கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை கைவிடக் கோரி நேற்று முன்தினம் கலெக்டர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து டோல்கேட் எதிர்ப்புக்குழு சார்பில் திருமங்கலம் பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் டோல்கேட் முன்பு மறியல் நடைபெற்றது. அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கியும் விரட்டி பிடித்தும் கைது செய்தனர். டோல்கேட்டை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சந்தித்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி