உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பேரிடரால் பாதிக்கப்பட்டோர் விடுபடும் அதிருத்ரா மஹா யாகம் | Athirudra Maha Yagam | Madurai

பேரிடரால் பாதிக்கப்பட்டோர் விடுபடும் அதிருத்ரா மஹா யாகம் | Athirudra Maha Yagam | Madurai

மதுரை மகா ருத்ர மகா யக்ஞ கமிட்டி சார்பில் லட்சுமி சுந்தரம் ஹாலில் உலக நன்மை வேண்டி அதிருத்ர மஹா யாகம் துவங்கியது. இதில் 150 வேத விற்பன்னர்கள் வேத மந்திர முழங்க ரித்விக்குகள் வரவேற்புடன் அதி ருத்ரா மஹா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. டிசம்பர் 21ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு மகாபாரதத்தில் இருந்து விடையில்லா கேள்வியும், விளக்கமான பதிலும் என்ற தலைப்பில் எம்.வி.அனந்த பத்மாச்சார்யாரின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. டிசம்பர் 22ல் சுசித்ரா பாலசுப்பிரமணியன் குழுவினரின் ஹரிகதா எனும் நிகழ்ச்சி, டிசம்பர் 23ம் தேதி பெரியபுராணம் காட்டும் பாதை என்ற தலைப்பில் மணிகண்டன் சொற்பொழிவு. டிசம்பர் 24ம் தேதி கடையநல்லூர் ராஜா கோபால பாகவதரின் நாம சங்கீர்த்தனம். டிசம்பர் 28ம் தேதி ஸ்ரீருத்ர மகிமை என்ற தலைப்பில் முசிறி அக்ரஹாரம் சோமாயாஜியின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, பாஜக கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ