மானாமதுரை டு அயோத்திக்கு 3வது முறையாக புறப்பட்ட சிறப்பு ரயில் | Ayodhya Special Train
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து 20 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் அயோத்திக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் தொடர்ந்து 6 நாட்களுக்கு பயணம் செய்யும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் செய்து கொடுக்கிறது. சலுகை கட்டணத்தில் அயோத்தி செல்லும் 292 பக்தர்களுக்கு பாஜக சார்பில் வழியனுப்பு விழா தடபுடலாக நடைபெற்றது. ரயில்வே ஸ்டேஷனில் சிவப்பு கம்பள விரிப்பு, பேண்டு வாத்தியம் முழங்க, பூக்கள் துாவி வழியனுப்பி வைக்கப்பட்டனர். ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்பி பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். அயோத்திக்கு சிறப்பு ரயில் கிளம்பியதைத் தொடர்ந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டது.