உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு | BJP Executive arrested in POCSO case | Madurai

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு | BJP Executive arrested in POCSO case | Madurai

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள அன்னை பாத்திமா காலேஜ் தலைவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாலியல் புகார் மனு அளித்து இருந்தார். அதில் தனது மகளின் செல்போனில் ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்தது. ஷா முதலில் எனது மனைவியிடம் உனது கடனை அடைத்து விடுவதாக கூறி மனைவியுடன தகாத உறவில் இருந்துள்ளார். மனைவி மூலமாக மகளையும் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதற்கு முழுமையாக தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் ஷா மற்றும் மாணவியின் தாய் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்திய கீழமை கோர்ட் வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி ஷா மற்றும் மாணவியின் தாயாரை விடுவித்தது. தொடர்ந்து போலீசார் ஷா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து அறிவியல் பூர்வமாக ஐகோர்ட் மதுரை கிளையில் நிரூபித்தனர். விசாரணை நடத்திய ஐகோர்ட் மதுரை கிளை ஷா மற்றும் மாணவியின் தாயாரை கைது செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை