உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்ட வந்த பாஜக பிரமுகரை தேடும் போலீஸ்

முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்ட வந்த பாஜக பிரமுகரை தேடும் போலீஸ்

முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்ட வந்த பாஜக பிரமுகரை தேடும் போலீஸ் / Tiruchendur / BJP member releases video of missing toilets திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 6 மாதம் முன்பு கோயில் வளாகத்தில் நவீன டாய்லெட்டுகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. எனினும் பயன்படுத்த முடியாதபடி டாய்லெட் கோப்பைகள், வாஷ் பேஷின், டைல்ஸ் கற்கள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணானதாக புகார் எழுந்தது. பயனற்று கிடக்கும் டாய்லெட்டுகளை மத்திய அரசு நலப்பிரிவு தெற்கு மாவட்ட பாஜக செயலாளர் பிரித்திவிராஜன் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தினார். டென்ஷனான போலீசார் அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்றனர். அவர் வீட்டில் இல்லை. வீட்டில் இருந்தவர்கள் எதற்காக தேடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். 2023 ம் ஆண்டு அவர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து செல்ல வந்துள்ளதாக தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர். கோயில் அவலங்களை சுட்டிக்காட்டிய பிரித்திவிராஜனை போலீசார் தேடுவது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை