உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ராம சீனிவாசன் மீது அவதுாறு திருச்சி சிவா மகனுக்கு நோட்டீஸ்

ராம சீனிவாசன் மீது அவதுாறு திருச்சி சிவா மகனுக்கு நோட்டீஸ்

திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா. இவர் முன்பு பாஜகவில் இருந்தார். பின் நீக்கப்பட்டார். இவர் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் மீது கடந்த நவம்பர் 26ம் தேதி ஃபேஸ்புக்கில் அவதுாறு பரப்பினார். அதில், பாஜக மாநில பொதுச் செயலாளர் காம சீனிவாசன் மீது, பாலியல் தொல்லை மற்றும் 110 பவுன், 8 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். லண்டனில் இருந்து வந்து புரட்சி செய்யப்பபோறான்னு பில்டப் பண்ணிக்கிட்டு இருக்காறானுங்க. ஆனா இங்க பாலியல் பஞ்சாயத்தைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் போல, என பதிவிட்டிருந்தார். அடிப்படை முகாந்திரம் இல்லாத ஆதாரமற்ற குற்றச்சாட்டை ராம சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை மீது சுமத்தி அவதுாறு பரப்பும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சூர்யா, இந்த அறிவிப்பு வந்த 15 நாட்களில் சமூக வலைதளத்திலேயே மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் ராம சீனிவாசனுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ராம சீனிவாசன் சார்பில் ஐகோர்ட் வக்கீல் கே.ஆர். லக்ஸ்மன் (K.R.Laxman), சூர்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ராம சீனிவாசன் புகழுக்கு களங்கம் விளைவிக்க முயன்ற சூர்யாவின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் ராம சீனிவாசன் மற்றும் அண்ணாமலையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை