/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தமிழகத்தில் கடந்த 3 நாளில் 4 குண்டு வீச்சு சம்பவங்கள் | Bomb Culture in Tamil Nadu
தமிழகத்தில் கடந்த 3 நாளில் 4 குண்டு வீச்சு சம்பவங்கள் | Bomb Culture in Tamil Nadu
தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கிய காலம் மலையேறி விட்டது. தற்போது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை அதிகம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறி இருக்கிறது என்பது கசப்பான உண்மை. தமிழகத்தில் சமீப காலமாக ஆங்காங்கே புதிதாக முளைத்து வந்த வெடிகுண்டு கலாச்சாரம் தற்போது பூதாகரமாக வெடித்து வருகிறது. இதற்கு முன்பு எத்தனையோ பயங்கரவாத சம்பவங்கள் தலை துாக்கியது. எனினும் தமிழக மக்கள் தங்களின் பயணங்கேளை தவிர்க்கவில்லை. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காரணம் வெடி குண்டு பயம் தான். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டு என நான்கு சம்பவங்கள் அரங்கேறின.
ஏப் 24, 2024