போர்வேல் ஜி.எஸ்.டி யால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பாதிப்பு
போர்வேல் ஜி.எஸ்.டி யால் 2.5 லட்சம் குடும்பத்தினர் பாதிப்பு / 2.5 lakh families affected by borewell GST / Madurai மதுரை மாவட்ட போர்வெல் ரிக் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் சங்கம் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. முன்பு வாட் வரி விதிப்பில் போர்வெல் தொழிலுக்கு பிரிவு 66-Dன் கீழ் விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 21ல் நடந்த 28வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் போர்வெல் தொழிலுக்கு அளிக்கப்பட்டிருந்த விதி விலக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. தற்போதைய ‛ஸ்டேட்டஸ் குவோ (Status quo) நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டும் நிலை நீடிக்கிறது. போர்வெல் தொழிலில் 70 சதவீதம் டீசலுக்கே செலவாகிறது. டீசல் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இல்லை. வாட் வரிவிதிப்புக்கு உட்பட்டது என்பதால் போர்வெல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வீட்டுக்கான குடிநீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளுக்கு போர்வெல் அமைக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் நிச்சயம் வரும் எனக் கூற முடியாது. ஒன்றுக்கும் மேற்பட்ட போர்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை ஈடுகட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஜி.எஸ்.டி., தருவதில்லை என போர்வெல் தொழில் செய்வோர் வேதனை தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளரிடம் ஜி.எஸ்.டி., வாங்காமல் 18 சதவீத ஜி.எஸ்.டி., கட்டுவது கடினம். 100 ரூபாய் வருமானம் வந்தால் 70 % எரிபொருளுக்கும், 10% வேலையாட்கள் சம்பளம், 10% காப்பீடு மற்றும் தேய்மான செலவு. மீதமுள்ள 10% வருமான வரியுடன் வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடிவதில்லை என்கின்றனர். பைட்: சுரேஷ் தலைவர், மதுரை மாவட்ட ரிக் உரிமையாளர் சங்கம் 00:39 - 01:31 02:02: - 02:55 breath: 50வது மற்றும் 53வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் சில தொழில்களுக்கு ஜி.எஸ்.டி., 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போர்வேலுக்கும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். போர்வேல் தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்து, முறையாக அரசுக்கு வரி செலுத்தத் தயாராக உள்ளனர். இத்தொழிலை நம்பி இரண்டரை லட்சம் குடும்பங்கள் உள்ளன. இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. 2018ல், ஜி.எஸ்.டி., கமிஷனர் போர்வெல் தொழிலுக்கு ஜி.எஸ்.டி., குறித்து தெளிவாகக் கூறவில்லை. தற்போது கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கின்றனர். இதனால் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது. இதை ஈடுசெய்ய பொதுமன்னிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர்.