உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வண்ணத்துப்பூச்சிகள் வாழும் மதுரையின் ஹார்ட் ஸ்பாட் தெரியுமா?

வண்ணத்துப்பூச்சிகள் வாழும் மதுரையின் ஹார்ட் ஸ்பாட் தெரியுமா?

வண்ணத்துப்பூச்சிகள் வாழும் மதுரையின் ஹார்ட் ஸ்பாட் தெரியுமா?| Butterfly survey | Wildlife | Endanger species | ஒரே இடத்தில் சுமார் 20 ஆயிரம் பட்டாம்பூச்சிகள். 45 வகை வண்ணத்து பூச்சிகளை கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்திய சர்வே. பட்டாம்பூச்சி துகள்கள் மூலம் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க நடக்கும் ஆய்வு. மதுரையில் ஒரு இடத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலர்புல் பட்டாம்பூச்சிகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம். அது உண்மைதான். மதுரையின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் 140 ஆண்டுக்கும் மேல் பழமையான அமெரிக்கன் கல்லூரி செயல்படுகிறது. அந்தக் கல்லூரி வளாகத்தில் மூங்கிள், பூவரசம், ரெயின் ட்ரீ என பல்வேறு வகையான மரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. மேலிருந்து பார்த்தால் பசுமை போர்த்தியது போலவே காட்சியளிக்கும் இந்த இடம். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை செல்லும் பறவைகள் அமெரிக்கன் கல்லூரி பகுதியில் தங்கி குஞ்சு பொரிக்கும் சூழலும் உருவாகி இருக்கிறது. அமெரிக்கன் கல்லூரியிம் விலங்கியல் துறை தலைவர் ஜாய் ஷர்மிளா பட்டாம்பூச்சிகள் தொடர்பாக கணக்கெடுப்பு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை செய்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பட்டாம்பூச்சிகளுக்கென தனி தோட்டம் உருவாக்கி இருக்கிறார். அங்கு பல்வேறுவகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை தருகின்றன. இந்த ஆண்டு பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில் விலங்கியல் துறை தலைவர் ஜாய் ஷர்மிளா மற்றும் மாணவர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர். அதில் கல்லூரி வளாகத்தில் மூன்று இடங்களில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை கணக்கீடு செய்து ஆச்சரியப்பட்டுப் போயிருக்கின்றனர். இதில் 45 வகை பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் கூறுகிறார். பட்டாம்பூச்சிகளை கணக்கிடுவது சுவாரசியமாக இருந்தது. இந்த ஆண்டு புதிய அரிய வகை பட்டாம்பூச்சிகள் பார்த்ததாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட மாணவர்களும் தெரிவித்தனர். பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள சில துகள்களை கொண்டு கேன்சருக்கான மருந்தை தயாரிக்க முடியுமா என்ற ஆய்வில் ஈடுப்படுள்ளார் பேராசிரியர் ஜாய் சர்மிளா. அதற்கு அரசின் நிதி உதவியை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். பட்டாம்பூச்சியை பார்க்கும் பொழுது மனதுக்கு அது ஒரு பரவசத்தை அளிக்கும் அது வாழ்வதற்கான சூழலை மனிதன் ஏற்படுத்தி தர வேண்டும். இந்த பட்டாம்பூச்சிகள் ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு சென்று மகரந்த சேர்க்கை செய்து தாவரங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன. அதேபோல பட்டாம்பூச்சிகளை நாம் பாதுகாப்பாக வரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஜூன் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !