பார்லிமென்ட்டில் மசோதாநிறைவேற்ற மதுரைஅப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் ஐஎம்ஏடாக்டர்கள் வலியுறுத்தல்
பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்ற மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் ஐஎம்ஏ டாக்டர்கள் வலியுறுத்தல் | Cancer Awareness Programme | Apollo Cancer Centers | IMA | Madurai உலக புற்று நோய் தினத்தையொட்டி மதுரை அப்போலோ புற்றுநோய் மையம், இந்திய மருத்துவ சங்கம், இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம் மற்றும் மதுரை புற்றுநோய் சங்கம் சார்பில் ஒன்றிணைந்து அறிவிப்போம் எனும் தலைப்பில் புற்று நோய் விழிப்புணர்வு தேசிய பிரச்சாரம் துவக்கப்பட்டது. புற்று நோய் வராமல் தடுக்கவும், புற்று நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கி நோயில் இருந்து முழுமையாக குணமடைய வகை செய்யும் வகையில் புற்று நோயை அறிவிக்கப்பட்ட நோயாக பார்லிமென்ட்டில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என அப்போலோ கேன்சர் சென்டர் டாக்டர்கள் அப்புறம் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மதுரை அப்போலோ புற்றுநோய் மையத்தின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்து குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் பேட்டியின் போது கதிரியக்க புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சதீஷ்ஸ்ரீனிவாசன், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் தேவானந்த், தீனதயாளன், மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், புற்றுநோய் பிரிவு மூத்த மேலாளர் பிரேம் டேனியல், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்ப்பராஜன், பாலு மகேந்திரா, மதுரை இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஜெபசிங், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் புற்றுநோயியல் ஒருங்கிணைப்பாளர் பிரேம் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.