உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / டூவீலர் மீது மோதுவதை தடுக்க காரை திருப்பவே எதிரே வந்த காரில் மோதி விபத்து

டூவீலர் மீது மோதுவதை தடுக்க காரை திருப்பவே எதிரே வந்த காரில் மோதி விபத்து

டூவீலர் மீது மோதுவதை தடுக்க காரை திருப்பவே எதிரே வந்த காரில் மோதி விபத்து | Madurai | Head-On Collision Between Two Cars Leaves Five Dead சென்னை பாடி குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் வயது 32. திருநெல்வேலிக்கு காரில் குடும்பத்தினருடன் சென்றார். அதே போல் மற்றொரு காரில் மதுரையிலிருந்து பிரகாஷ் வயது 42 திருச்சிக்கு சென்றார். கார் காலை 6.30 மணியளவில் மதுரை மேலூர் அருகேயுள்ள தும்பை பட்டி மேம்பாலத்தில் சென்றபோது முன்னாள் டூவீலரில் எஸ்வி மங்கலத்தை சேர்ந்த முருகன் வயது 40, சின்னையா மகன் முருகன் வயது 55, சென்ற டூவீலர் மீது ஸ்ரீராம் சென்ற கார் மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து எதிர்திசையில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஸ்ரீராம் வயது 43, மனைவி ரஞ்சனா வயது 30, மகள் கிருத்திகா வயது 2, சகோதரர் பாலாஜி வயது 28, அம்மா ராஜகுமாரி வயது 52 உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் படுகாயமடைந்த கனகராஜ் வயது 55 உள்பட மூவரை மதுரை அரசு ராஜாஜி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆக 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ