வே.மிக்கேல்பட்டணம் தேர் பவனியில் பங்கேற்று பிரார்த்தனை செய்த பங்கு மக்கள் | Church Festival
வே.மிக்கேல்பட்டணம் தேர் பவனியில் பங்கேற்று பிரார்த்தனை செய்த பங்கு மக்கள் | Church Festival | Manamadurai சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வே.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா கடந்த 20 ம் தேதி அருட்தந்தை சேவியர் அந்தோணி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் கொடி பவனி, நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. விழாவின் ஒன்பதாம் நாளில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் பங்கு தந்தைகள், பாதிரியார்கள், சிஸ்டர்ஸ், பிரதர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புனித மைக்கேல் அதித்தூதர், புனித அன்னை மேரி மற்றும் ஏசுவின் சிலைகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் வைத்து தேர் பவனி துவங்கியது. ஆலயத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேர்கள் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் மைக்கேல்பட்டணம், பச்சேரி, வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.