தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை | Ilayangudi | Clash between two groups; sanitation worker attacked சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட ரசூலாசமுத்திரம் பகுதியில் இரு பிரிவினர் வசித்து வருகினறனர். கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இருபிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் ஒரு பிரிவை சேர்ந்த குமார் என்ற தற்காலிக தூய்மை பணியாளர் பணியில் ஈடுபட்டிருந்தார். சமுதாய கூடத்தில் படுத்திருந்த மற்றோரு பிரிவைச் சேர்ந்த சிலரை வெளியே போக சொல்லியுள்ளார். அதில் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. மற்றொரு பிரிவை சேர்ந்த சிலர் தூய்மை பணியாளர் குமாரை கண்மூடித்தனமாக அடித்து தாக்கி காயப்படுத்தினர். காயமடைந்த தூய்மை பணியாளர் குமார் சிவகங்கை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். குமார் பிரிவை சேர்ந்த ஏராளமானோர் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சிவகங்கை ரோட்டில் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரசூலா சமுத்திரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இளையான்குடி போலீசில் இரு பிரிவினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.