உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை கலெக்டர் சங்கீதா அவமானம் செய்ததாக குற்றச்சாட்டு | Madurai | Protest by blocking the collector

மதுரை கலெக்டர் சங்கீதா அவமானம் செய்ததாக குற்றச்சாட்டு | Madurai | Protest by blocking the collector

மதுரை கலெக்டர் சங்கீதா அவமானம் செய்ததாக குற்றச்சாட்டு | Madurai | Protest by blocking the collector car இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 31 ம் தேதி மாற்றுத் திறனாளிகள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குடியேற்றப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிப்ரவரி 14 ம் தேதி கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக மாற்றுத்திறனாளிகள் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. கொதிப்படைந்த மாற்றுத்திறனாளிக்ள கலெக்டர் தங்களை அவமதிப்பதாக கூறி கலெக்டர் காரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்டிஓ சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுத்திறனாளிகளை கலெக்டருடன் பேச அழைத்து சென்றார். கலெக்டரை சந்தித்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி