மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஸ்தம்பிப்பு | Protest enters 5th day | Competition Protest demanding a Solution | Manamadurai | Sivagangai சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ் கடந்த 6 நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் அரசு மருத்துவமனையில் இருந்த போது உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாகக் கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மானாமதுரை வழி விடு முருகன் கோயில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் இன்றுடன் 5வது நாளாக தொடர்கிறது. இதனால் ராமேஸ்வரத்திற்கு செல்லும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள் தேர்வு நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். சாலை மறியலை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி மானாமதுரையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தேவர் சிலை முன்பாகவும், பல்வேறு இடங்களிலும் போட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மானாமதுரையில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரச்சைனையை முடிவுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.