கீ மேனை விடுவிக்க வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கீ மேனை விடுவிக்க வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் | Conspiracy to overturn the train | interrogation with the employee | Mamamadurai ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் - பரமக்குடி இடையே தண்டவாளத்தின் 200க்கும் மேற்பட்ட க்ளிப்புகள் 120 மீட்டர் தொலைவிற்கு கழன்று கிடந்தது. இதை கீ மேன் செந்தில்குமார் பார்த்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் கழன்று கிடந்த கிளிப்புகளை மாட்டினர். இதனால் பெரிய அளவிலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தகவல் கொடுத்த கீ மேன் செந்தில்குமாரை போலீசார் விசாரணைக்கு நேற்று மாலை ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். இரவு 11 மணி வரை அவரை விடுவிக்கவில்லை. செந்தில்குமாரை விடுவிக்கக்கோரி ரயில்வே தொழிலாளர்கள் மானாமதுரை ரயில்வே போலீசார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே செந்தில்குமாரை மேல் விசாரணைக்காக போலீசார் மதுரை அழைத்துச் சென்றனர். அவரை விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ரயில்வே தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தண்டாவளத்தை இணைக்கும் 200க்கும் மேற்பட்ட கிளிப்புகள் கழன்று கிடந்த சம்பவம் ரயில்களை கவிழ்க்க நடந்த சதி வேலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.