உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை |AMMK administrator's son is in contact withthe student's murder?

வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை |AMMK administrator's son is in contact withthe student's murder?

வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை | AMMK administrators son is in contact with the students murder? | melur | madurai மதுரை மாவட்டம் மேலூர் அருகே எட்டிமங்கலம் வீரபத்திரன்பட்டியை சேர்ந்த சந்தானம் என்ற பாண்டிக்குமரன், வயது 20. இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்தார். புதுசுக்காம்பட்டியில் தனது பாட்டியை நேற்றிரவு காரில் இறக்கி விட்டு நண்பர் அழைப்பதாக கூறி விட்டு சென்றார். பாண்டிக்குமரன் சிறிது துாரம் சென்றபோது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு எஸ்கேப் ஆகினர். மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் ஸ்பாட்டிற்கு விரைந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலுார் அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பினர். பாண்டிக்குமரனை கொலை செய்த நபர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மேலுார் அரசு ஹாஸ்பிடல் முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக வாலிபர் ஒருவரிடம் மேலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடுகின்றனர். கொடுக்கல் வாங்கல் பிரச்னை அல்லது காதல் விவகாரம் காரணமாக பாண்டிக்குமரன் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி