உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஓட்டல்களுக்கு சமையல் சிலிண்டர் சப்ளை நிறுத்தம்

ஓட்டல்களுக்கு சமையல் சிலிண்டர் சப்ளை நிறுத்தம்

ஓட்டல்களுக்கு சமையல் சிலிண்டர் சப்ளை நிறுத்தம் | Madurai | Iran-Israel war tension | Commercial gas cylinders supply stopped ஈரான் - இஸ்ரேல் போர் மேகம் காரணமாக தமிழ்நாட்டில் கமர்சியல் சிலிண்டர் எனப்படும் சமையல் வணிக கேஸ் சிலிண்டர்கள் சப்ளை நிறுத்தப்பட்டது. வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் வினியோகமும் தாமதமாகி வருகிறது. நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெய் 85 சதவீதம் இறக்குமதியை நம்பித்தான் உள்ளது. வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை, இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சப்ளை செய்து வருகின்றன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்காசிய நாடுகளில் காணப்படும் போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் சமையல் வணிக கேஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டது. புக்கிங் செய்ய முடியாமல் ஓட்டல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதன் காரணமாக வியாபாரிகள் அவதிப்படுவது மட்டுமல்லாமல் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் 3 வாரத்துக்கு தேவையான கையிருப்பு இருக்கிறது. எனினும் 20 நாட்களுக்கு முன்பு பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை