தடுப்புச்சுவர் இல்லாத கொண்டை ஊசி வளைவு ரோடுகள் | Dangerous hiss road | Addukkam - kodaikanal
கொடைக்கானல் அடுக்கம் செல்லும் ரோட்டில் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். நெடுஞ்சாலை துறையினரால் போடப்பட்ட குறுகிய ரோட்டில் பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், கம்பம்,குமுளி, மற்றும் கேரள மாநிலம் வரை இந்த ரோட்டில் வாகனத்தில் பயணிக்கின்றனர். இந்த குறுகிய ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இப்பகுதியில் பழங்கள் சீசன் துவங்கிய நிலையில் வாகனங்கள் இந்த ரோட்டின் வழியே அதிகளவு செல்கின்றன. சில மாதங்களாக ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. ரோட்டில் பாதுகாப்பிற்கான தடுப்பு சுவர்கள் இல்லாததால் பள்ளத்தாக்கு பகுதியாக காட்சியளிகிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்கின்றன. பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலைத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.