உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில்| Madurai எழுந்தருள்கிறார்

தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில்| Madurai எழுந்தருள்கிறார்

தங்கக்குதிரை வாகனத்தில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் / Madurai / Devotees welcome Kallazhagar who arrived in Madurai மதுரை அழகர்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாள் சுவாமி தினமும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் விழாவின் ஒரு பகுதியாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், வைகை ஆற்றில் இறங்கவும் மதுரையம்பதிக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படும் வைபவம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக அழகர்கோவிலில் இருந்து நேற்று மாலை கொண்டப்பநாயக்கர் மண்டபத்துக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் சங்கு, சக்கரம், நேரிக்கம்பு, வளைதடியுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பதினெட்டாம் படி கருப்பணசாமி கோயில் முன்பு கள்ளழகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அதிர்வேட்டு முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட மதுரையை நோக்கி புறப்பட்டார்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ