பரிசுகளை அள்ளிய மாணவ செல்வங்கள் | Dinamalar Manavar Pathippu Pattam Competition | Madurai
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் சார்பில் வினாடி வினா 2024 - 2025 ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. தினமலர் நாளிதழ் மாணவர்களுக்கு எண்ணற்ற கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதில் ஒன்றான பட்டம் வினாடி வினா நிகழ்ச்சிக்கான தேர்வில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் A டு H என 8 அணிகளாக பிரிக்கப்பட்ட இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. ஒரு அணிக்கு தலா 2 பேர் வீதம் மொத்தம் 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதன்படி A பிரிவில் கல்லுப்பட்டி லார்ட் வெங்கடேஸ்வரா பள்ளி (lord Venkateshwara school) B பிரிவில் மதுரை நாகமலைப்புதுக்கோட்டை எஸ் பி ஓ ஏ - சி பி எஸ் சி பள்ளி ( SBOA - CBSC ) C பிரிவில் சிவகங்கை சேது ராணி பள்ளி (SETHU IRANI SCHOOL) D பிரிவில் சிவகங்கை ஆக்ஸ்போர்டு ஹையர் செகண்டரி பள்ளி (OXFORD HSC SCHOOL) E பிரிவில் விருதுநகர் வத்ராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் பள்ளி (RANGARAO LIONS GIRLS SCHOOL) F பிரிவில் மதுரை மேலுார் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா (SRI SUNDASWARA VIDHYASALA) G பிரிவில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி (KRISHNAMMAL RASUBBAIYER SCHOOL) H பிரிவில் விருதுநகர் அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் ஹையர் செகண்டரி பள்ளி (DEVANGER HSC GIRLS) அணிகள் பங்கு பெற்றன. வினாடி வினாவில் பல்வேறு பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஹாரி தியாகராஜன், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் அபிநாத் சந்திரன், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி டீன் நீதி, தினமலர் நாளிதழ் இணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இப்போட்டியில் F அணி முதலிடம் பெற்றது. A அணி இரண்டாமிடம் மற்றும் B அணி மூன்றாமிடம் பெற்றது. மாணவ செல்வங்களுக்கு முதல் பரிசு HP லேப் டாப், இரண்டாம் பரிசு HP லேப்டாப் மற்றும் மூன்றாம் பரிசு சாம்சங் கேலக்ஸி டேப் வழங்கப்பட்டது. தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் வினாடி வினா நிகழ்ச்சி மெயின் ஸ்பான்சர் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் கோ ஸ்பான்சர்ஸ் குயின் மீரா இன்டர்நேஷனல் ஸ்கூல், கிப்ஃட் பார்ட்னர் சத்தியா, ரெஃப்ரெஷிங் (refreshing) பார்ட்னர் அர்விந்த் செட்டிநாடு ஸ்னாக்ஸ், சாக்கோ கிக் மற்றும் ஸ்டேஷனரி பார்ட்னர் சீமா நோட் புக் வழங்கியது.