எல்லாமே அள்ளலாம்; என்ஜாய் பண்ணலாம் | Dinamalar Smart Shopper's EXPO 2024 | Tamukkam Ground | Madurai
மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று ஞாயிறு விடுமுறை மற்றும் ஆடி 18 ஐ ஒட்டி களைகட்டியது. கண்காட்சியில் தமிழக ஸ்டால்களுடன் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஸ்டால்கள் என 250 ஏசி ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. தினமலர் எக்ஸ்போ துவங்கியதை அறிந்த தென் மாவட்ட மக்கள் குடும்பத்துடன் மதுரைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. குட்டீஸ் முதல் முதியவர் வரை குடும்பம் குடும்பமாக திரண்டனர். ஆஹா... இதுவல்லவோ உண்மையான ஷாப்பிங் திருவிழா என சொல்லும் அளவிற்கு தரமான பொருட்கள், குறைந்த விலையில், அதுவும் தள்ளுபடியுடன் வாரி வழங்கி வருவதால் எதை வாங்குவது, எதை விடுவது என தெரியாமல் இல்லத்தரசிகள் ஆனந்தத்தில் திளைத்தனர். குளுகுளு ஸ்டால்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள அழகழகான பொருட்களை அத்தனையும் அள்ளிச் செல்ல வேண்டும் என மனம் அலைபாந்ததாக பர்ச்சேஸ் செய்த பெண்கள் அங்கலாய்த்தனர்.