தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு! Dinamalar | Smart Shoppers Expo
தினமலர் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு! Dinamalar | Smart Shoppers Expo | Thamukkam Ground | Madurai மதுரை தமுக்கம் மைதானத்தில் தினமலர் மற்றும் சத்யா இணைந்து நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு குளிரூட்டப்பட்ட அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் குண்டூசி முதல் 100 இஞ்ச் டிவி, பிரிட்ஜ், கார் என வீட்டுக்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் வாங்கலாம். பெண்களுக்கு சேலை, ரெடிமேட் ஆடைகள், சுடிதார், டைமண்ட் நகைகள், தங்க நகைகள், பூஜைப் பொருட்கள், சிறுவர்களுக்கு பிஸ்கட், சாக்லேட், டாய்ஸ், புத்தகம், ஹெல்த் மிக்ஸ் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் தினமலர் கண்காட்சி அரங்கில் குவிந்து வருகின்றனர். கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிளே ஏரியா சிறுவர்களை சுண்டி இழுக்கிறது. மினியேச்சர் பொம்மைகள், பைன் பிளே ஏரியாவில் ஜம்பிங், வாட்டர் போட், வாட்டர் ரோல், ஜுராசிக் வோர்டு ஆகியவற்றை குட்டீஸ்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். இது தவிர குழந்தைகளுக்கு ஒட்டக சவாரி உள்ளது. அதில் குழந்தைகள் அமர்ந்து குதூகலமாக வருவதை பார்த்து பெற்றோர் ஆனந்தம் அடைகின்றனர். கண்காட்சியில் விதவிதமான உணவு வகைகளுடன் புட் கோர்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் விளையாடி முடித்து புட் கோர்ட் வரும் மக்கள் பல வகை உணவுகளையும் ருசி பார்த்து செல்கின்றனர். கண்காட்சியில் தினமலரின் ஒரு சந்தா மூன்று பலன்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1999 ரூபாய்க்கு சந்தா எடுத்தால் ஓராண்டுக்கு தினமலர் நாளிதழ் வீடு தேடி வரும். அடுத்ததாக வீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் தனிநபர் விபத்து காப்பீடும், ஒரு லட்சம் ரூபாய் விபத்தினால் ஏற்படக்கூடிய மருத்துவ செலவுக்கான காப்பீடு மற்றும் 5 லட்ச ரூபாய் வீட்டு உடமைக்கான காப்பீடு என மூன்று பலன்கள் கிடைக்கிறது. எக்ஸ்போவில் இந்த திட்டத்தில் இணைந்தால் தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் 1000 ரூபாய் மதிப்பிலான புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை வரை மட்டுமே இந்த கண்காட்சி நடப்பதால் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.