குமரியில் டிவிஆருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வலியுறுத்தல்! Dinamalar 75th Anniversary |TVR Memoria
குமரியில் டிவிஆருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வலியுறுத்தல்! Dinamalar 75th Anniversary |TVR Memorial மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப் பேரவை சார்பில், தினமலரின் 75-வது ஆண்டு பவள விழா மதுரை திருமலை ஆதீனம் ஸ்ரீ சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பேரவைத் தலைவர் முத்தம் பெருமாள் தலைமை வகித்தார். தெப்பக்குளம் பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். இதில், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர் நாராயணகுமார், மூத்த பத்திரிகையாளர் திருமலை, மதுரை தினமலர் செய்தி ஆசிரியர் ரமேஷ் குமார், தினமலர் இணையதள ஆசிரியர் தண்டபாணி, பேரவை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், தினமலர் நிறுவனர் டிவிஆர் பெயரில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்குத் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என்றும், குமரி மாவட்டத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்றும் மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப் பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.