ஆடல், பாடலுடன் தீபாவளி கொண்டாடிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்
ஆடல், பாடலுடன் தீபாவளி கொண்டாடிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் | Diwali celebration | Chennai High Judge K.R.Sreeram Participation | Madurai சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அருகே ரோஜாவனம் என்ற முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மற்றும் முதியோர் வசிக்கின்றனர். இந்த இல்லத்தை மாநகராட்சி பராமரிக்கிறது. இங்கு வந்த சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ஆதரவற்றோர் மற்றும் முதியோருடன் சேர்ந்து தீபாவளியை வெகு சிறப்பாக கொண்டாடினார். ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு புத்தாடைகள் வழங்கி, அவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார். விழாவில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி R.சுப்பிரமணியன் மற்றும் எம்பிஏ வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு நீதிபதிகள் உணவு பரிமாறினர்.