வீட்டிற்கு வாங்க பணம் தருகிறோம் என மைக்கில் அதிரடி அறிவிப்பு
வீட்டிற்கு வாங்க பணம் தருகிறோம் என மைக்கில் அதிரடி அறிவிப்பு | womens participation in dmk campaign | notification of payment | Madurai மதுரை மாவட்டம் மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் பாலாஜி, பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட பெண்கள் கிராம மந்தை பகுதியில் திரண்டனர். அங்கு மைக் செட்டில் கட்சி நிர்வாகி ஒருவர், ரயில்வே கேட் அருகே உள்ள ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வம் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து ஒன்றிய செயலாளர் வீட்டுக்கு திபுதிபுவென படையெடுத்தனர். அவரது வீட்டின் முன்பக்க வளாகத்தில் அமர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தனர். கதவுகள் பூட்டப்பட்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பணம் பட்டுவாடா நடப்பது தொடர்பாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. ஸ்பாட்டுக்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட திமுக நிர்வாகிகள், வீட்டிற்குள் இருந்த பெண்களை சாரை சாரையாக வெளியேற்றினர். ‛வீடு தேடி பணம் வரும் கலைந்து செல்லுங்கள், என்றதும் பெண்கள் கதறி அழுகாத குறையாக பணம் கிடைக்காததால் பரிதாபத்துடனும் சென்றனர்.