தொண்டர் கடிதத்தை கண்டு கொள்ளாத ஸ்டாலின் | Madurai | DMK | CM Stalin
மதுரை ஆவினில் திமுக தொழிற்சங்க கெளரவ தலைவராக இருந்தவர் மானகிரி கணேசன் வயது 73. கடந்த 29ம் தேதி பசுமலை மூலக்கரையில் உள்ள எம்எல்ஏ தளபதி வீட்டு முன் கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பலத்த தீக் காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பிடலில் தீக்காய சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பெற்று வரும் மானகிரி கணேசனிடம் நீதிபதி லட்சுமி விசாரணை நடத்தினார். இந்நிலையில் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2023 ஜூன் 28 ம் தேதி தமிழக கவர்னர் ரவியை மாற்ற வலியுறுத்தி சிம்மக்கல்லில் கருணாநிதி சிலை முன்பாக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சம்பவம் தொடர்பாக முன்கூட்டியே போஸ்டர் ஒட்டியிருந்தும், மாநகர மாவட்ட செயலாளர் தளபதி விசரிக்கவில்லை . தீக்குளிப்பு சம்பவத்தால் உடலில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற கணேசனை கட்சி நிர்வாகிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. இது குறிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் தீக்குளிப்பேன் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் கட்சி தலைவர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கணேசன் மீண்டும் எம்எல்ஏ தளபதியை கண்டித்து அவர் வீட்டின் முன் தீக்குளித்து இறந்தது கட்சியின் நிர்வாகிகளிடைய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.