உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ₹ 10,000 கோடி வியாபாரம் எனக்கூறி பலரிடம் பண மோசடி | ₹ 18 Lakh fraud | case againts DMK executive

₹ 10,000 கோடி வியாபாரம் எனக்கூறி பலரிடம் பண மோசடி | ₹ 18 Lakh fraud | case againts DMK executive

₹ 10,000 கோடி வியாபாரம் எனக்கூறி பலரிடம் பண மோசடி | ₹ 18 Lakh fraud | case againts DMK executive, women | Madurai மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அருகில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்த கிருஷ்ணாபுரம் காலனி பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணிடம் தெய்வேந்திரன் சிலம்பம் மற்றும் யோகா கற்றார். அப்போது திருவள்ளூர் மாவட்ட திமுக பிரதிநிதி முகமது ரஃபி என்பவர் வெளிநாட்டில் 10,000 கோடி மதிப்பிலான இரிடியம் கலசத்தை விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தை இந்தியாவில் பெறுவதற்கு அதிகளவிற்கு செலவு இருப்பதால் நாம் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என அடிக்கடி தெய்வேந்திரனிடம் கலைச்செல்வி ஆசை வார்த்தை கூறி வந்தார். இதை நம்பிய தெய்வேந்திரன் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முகமது ரஃபி மதுரையில் கலைச்செல்வி வீட்டிற்கு வந்தார். அப்போது முகமது ரஃபியிடம் 3 லட்சம் ரூபாயை கலைச்செல்வி மூலம் தெய்வேந்திரன் கொடுத்தார். சில நாட்கள் பிறகு மீண்டும் தெய்வேந்திரனை தொடர்பு கொண்டு ரஃபி பணம் கேட்டார். இதையடுத்து ஆன்லைனில் கலைச்செல்வி மூலம் 2 லட்சம் ரூபாயை தெய்வேந்திரன் அனுப்பினார். அதைத் தொடர்ந்து சென்னையில் இரிடியம் தொடர்பான மீட்டிங்கை ரஃபி நடத்தினார். அதில் தெய்வேந்திரன் உட்பட தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் ஆதார், கைரேகை உள்ளிட்ட ஆவணங்களை ரஃபி பெற்றுக் கொண்டார். இன்னும் சில நாட்களில் அனைவரும் மும்பை சென்று அங்கு ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என ரஃபி ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தார். மீட்டிங் முடிந்த பின் இருடிய கலச விற்பனையில் கிடைத்த லாபத்தொகை முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் தயாராக இருக்கிறது எனக்கூறி தெய்வேந்திரனிடம் மேலும் 5 லட்சம் ரூபாய் ரஃபி பெற்றார். இப்படி பல சந்தர்ப்பங்களில் தெய்வேந்திரனிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் வரை ரஃபி பெற்றார். எனினும் ரஃபி சொன்னது போல் லாபத்தொகை கைக்கு வரவில்லை. இதையடுத்து 18 லட்சம் ரூபாயை தரும்படி ரஃபியிடம் தெய்வேந்திரன் கேட்டபோது பிரதமர் மற்றும் நிதியமைச்சர் அலுவலகத்தில் இருந்து அப்ருவல் வந்தவுடன் பணம் தருவதாக கூறினார்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ