ஆட்சி மாறியும் திமுக மணல் கொள்ளை தொடருது | Karaikudi | DMK Functionary Arrested | Sand Smuggling
ஆட்சி மாறியும் திமுக மணல் கொள்ளை தொடருது | Karaikudi | DMK Functionary Arrested | Sand Smuggling சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாத்தம்பத்தி மணிமுத்தாறு பகுதியில் வருவாய், கனிம வள அதிகாரிகள் அமோக ஆதரவுடன் திமுக நிர்வாகிகள் 24 மணி நேரமும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கல்லல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மணிமுத்தாற்றில் சரக்கு வாகனத்தில் கும்பல் மணல் அள்ளிக் கொண்டிருந்தது. போலீசாரை பார்த்தது வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு கும்பல் எஸ்கேப் ஆனது. வாகனத்தை பறிமுதல் செய்து கல்லல் போலீஸ் ஸ்டேஷன் எடுத்து வந்தனர். இரவு கல்லல் போலீஸ் ஸ்டேஷனுக்கு மது போதையில் வந்த கல்லல் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அடைக்கலராஜ் போலீசாரை சகட்டுமேனிக்கு திட்டினார். வாகனத்தை உடனே விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என போலீசாரை பார்த்து மிரட்டினார். தட்டிக்கேட்ட போலீஸ் எஸ்ஐ துரைசிங்கத்திடம் தகராறு செய்து அவரை கடுமையாகத் தாக்கி விட்டு ஓட்டம் பிடித்தார். இதில் காயமடைந்த எஸ்ஐ துரைசிங்கம் அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். எஸ்ஐ கொடுத்த புகாரில் திமுக நிர்வாகி அடைக்கலராஜை சிறையில் அடைக்கப்பட்டார்.