பெண்களிடம் வசமாக சிக்கிய | DMK MLA | Alcohol sales are superb
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அ.கோவில்பட்டி கிராமத்தில் வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை தி.மு.க., எம்.எல்.ஏ. வெங்கடேசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்து புறப்பட தயாரான எம்எல்ஏவை கிராம பெண்கள் முற்றுகையிட்டனர். தங்களது ஊரில் சில டீக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கூறினர். பிராந்தி மற்றும் விஸ்கி மது வகைகளின் தரத்திற்கு ஏற்ப குவாட்டர் 300 முதல் 1000 ரூபாய் வரை டீக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் கொடுத்து குடிமகன்கள் சரக்கு பாட்டில் வாங்குகின்றனர். குவாட்டர் வாங்குவோருக்கு உறுகாய், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் கிளாஸ் இலவசமாக வழங்குவதாகவும், அ.கோவில்பட்டி கிராமத்தில் மது விற்பதை தடுக்கா விட்டால் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என எம்எல்ஏவுடன் கடும் வாக்குவாதததில் ஈடுபட்டனர்.